மாரடைப்பால் இறந்ததாக வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த நடிகை திவ்யா ஸ்பந்தனா!

நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் இன்று காலை திடீரென வதந்தி பரவிய நிலையில், நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  தமிழில் சிலம்பரசன் நடித்த…

நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் இன்று காலை திடீரென வதந்தி பரவிய நிலையில், நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தமிழில் சிலம்பரசன் நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவரது இயர்பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

இவர் தற்போது, சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2013-ம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். சமீபத்தில், ஷாருக்கான் நடித்த பதான் படத்திலிருந்து வெளியான பாடலில் தீபிகா படுகோன் காவி நிற ஆடை அணிந்திருந்ததால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு திவ்யா, “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி தனது கருத்தை கூறியதற்காகவும் ராஷ்மிகாவின் தனித்துவத்திற்காகவும் தீபிகா தனது ஆடைக்காகவும் மற்றும் சில பெண்கள் இப்படியாக பல காரணங்களுக்காக கேலி கிண்டலுக்கு உள்ளாகுகிறார்கள். எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எங்களது அடிப்படை சுதந்திரம். பெண்கள் கடவுள் துர்கா தேவியின் உருவங்கள். பெண் வெறுப்பு எனும் தீமைக்கு எதிராக போராட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

https://twitter.com/chitraSD/status/1699312800730857615?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699312800730857615%7Ctwgr%5E282ac7904e7e76b1429d062643a39e90132cb613%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F1118910-divya-spandana-denies-rumor-about-her-death.html

இந்நிலையில், ரம்யா மாரடைப்பால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் இன்று காலை வதந்தி பரவியது. தொடர்ந்து பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது தான் ஜெனீவாவில் நலமுடன் இருப்பதாகத் நடிகை திவ்யா தெரிவித்துள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1699342125480210497

மேலும், தனக்கு தற்போது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில் தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனீவாவில் இருந்து நாளை பராகுவே  செல்வதாகவும், விரைவில் பெங்களூரூ திரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார். அதற்கு ரம்யா “ விரைவில் பெங்களூருவில் சந்திக்கலாம்” என ரிப்ளை செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.