சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடியுங்கள் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக…

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடியுங்கள் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

2021-ம் ஆண்டிலிருந்தே வழக்கு விசாரணை குற்றச்சாட்டுப்பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.