முக்கியச் செய்திகள் சினிமா

நடிகை அனுஷ்காவின் 16 ஆண்டு திரைப் பயணம்

நடிகை அனுஷ்கா சினிமாவில் கால் பதித்து இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்வீட்டி ஷெட்டி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு யோகா ஆசிரியர். அனுஷ்கா நடித்த படங்கள் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே இருக்கும்.

அனுஷ்காவின் திரைப்பயணம் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், 2005-ல் வெளியான தெலுங்கு திரைப்படமான Super-ல் தொடங்கியது. தமிழில் சிங்கம், என்னை அறிந்தால், வேட்டைக்காரன், லிங்கா, தாண்டவம், இரண்டாம் உலகம் உட்பட இதுவரை பல்வேறு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய box office ஹிட்டாகிய பாகுபலி, அருந்ததி, ருத்ரமாதேவி, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் தமிழ்நாடு அரசின்
திரைப்பட விருது உட்பட பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. பாகுபலியில் இவர் நடித்த தேவசேனா கதாப்பாத்திரம் இவருக்கு உலகெங்கும் ரசிகர்களை பெற்றுத்தந்தது என்றே கூறலாம்.

Advertisement:

Related posts

“2,000 ரூபாய் நோட்டை பார்த்ததே இல்லை” – நூதன கொள்ளை

Saravana Kumar

கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

Ezhilarasan

ரசிகர்கள் மனம் கவர்ந்த பொம்மி கதாபாத்திரம்.!

Nandhakumar