நடிகை ஆலியா பட்டின் உடையில் லட்சம் முத்துக்களா?

மெட் காலா 2023 நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆலியா பட்டின் உடையின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட் காலா அல்லது மெட் பால், நியூயார்க் நகரத்தில் நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும்…

மெட் காலா 2023 நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆலியா பட்டின் உடையின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெட் காலா அல்லது மெட் பால், நியூயார்க் நகரத்தில் நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மே முதல் திங்கட்கிழமை நடைபெறும். மே 1-ம் தேதி நடந்து முடிந்த மெட் காலா நிகழ்ச்சியில் இந்திய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, இஷா அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலியா பட்டின் ஆடை பேசு பொருளாகியுள்ளது. இந்த உடை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் பின் அது கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட் காலாவில் கலந்துகொள்வது இது முதல் முறை அல்ல என்று நடிகை ஆலியா பகிர்ந்து கொண்டார்.

 

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் பிறந்தநாள் விழாவில் ஆலியா பட்டின் உடைவடிவமைப்பாளர் பிரபால் குருங் ”நடிகை ஆலியா பட்டின்  உடை இந்தியாவில் கை எம்ப்ராய்டரி செய்யப்பட்ட 1 லட்சம் முத்துக்கள் இருப்பதாகவும் கை எம்ப்ராய்டரி செய்யப்பட்டது” என தெரிவித்தார்.

ஆலியாவின் ஆடை, சூப்பர்மாடல் கிளாடியா ஷிஃபரின் 1992 சேனல் பிரைடல் தோற்றத்தில் இருந்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.