கார் விபத்தில் சிக்கிய #ActorJeeva!

கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் ஜீவா. இவர் தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி…

#ActorJeeva involved in a car accident!

கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் ஜீவா. இவர் தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்துள்ளார். இவர்களின் கார் கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, திடீரென இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அந்த வாகனத்தில் மோதி விடாமல் இருக்க ஜீவா தனது காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நடிகர் ஜீவா லேசான காயங்களுடன் தப்பினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஜீவா மற்றும் அவரது மனைவியை மீட்டனர். பின்னர் அருகில் இருந்த கிளீனிக்கில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து ஜீவா வெறொரு கார் மூலம் சென்னை புறப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.