ரூ. 1.5 கோடி மோசடி: விவேக் ஓபராய் புகாரின்பேரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு!

திரைப்பட நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்தாக நடிகர் விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட்டத புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது…

திரைப்பட நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்தாக நடிகர் விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட்டத புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விவேக் ஓபராய் மற்றும் அவரது மனைவி பிரியங்கா சார்பில் பிரதிநிதி விவேக் என்பவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் திரைப்பட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என சஞ்சய் சாஹா உள்ளிட்ட 3 பேர் அளித்த வாக்குறுதி அடிப்படையில் விவேக் ஓபராய் பணத்தை முதலீடு செய்ததாகவும், ஆனால் அந்த பணத்தை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தவறான வழியில் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விவேக் ஓபராய் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் ஒன்றைக் கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சஞ்சய் சாஹா உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் 3 பேர் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ்  அந்தேரி கிழக்கு  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.