அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ‘தமிழக வெற்றி கழகம்’!

நடிகர் விஜயின் கட்சி பெயர் வெளியானதை தொடர்ந்து, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற வார்த்தை எக்ஸ் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.  நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று…

நடிகர் விஜயின் கட்சி பெயர் வெளியானதை தொடர்ந்து, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற வார்த்தை எக்ஸ் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  இன்று அவர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.  அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  “என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல.  அது ஒரு புனிதமான மக்கள் பணி.

இதையும் படியுங்கள்:  “இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!

அரசியலின் உயரம் மட்டுமல்ல,  அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.  தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடுவோம். ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  அவரின் கட்சிப் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற வார்த்தை எக்ஸ் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.