பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதற்கு நடிகர் சூர்யா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடி மக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாகத் தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.
https://twitter.com/Suriya_offl/status/1456245112367828994
மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வருக்கு உளமார்ந்த நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.








