‘ரிபெல்’ படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா!

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில்,  ஜி.வி.பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர்…

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில்,  ஜி.வி.பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரிபெல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தும் உள்ளார்.  மேலும் இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ரிபெல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று (நவ.11) வெளியிட்டார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசரில், அடிதட்டு மக்களின் நிலையையும், அதன் அரசியலையும் பேசும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
போராட்ட களத்தின் காட்சிகளால் நிரப்பப்பட்டு,  இளையராஜாவின் இசையோடு நிறைவு பெறும் இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் வெளியான இப்டத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.