தங்களது விமானத்தில் நடிகர் சூர்யா பயணம் செய்தது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. அதில் நடிப்பின் நாயகனுக்கு நன்றி. பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. ’கங்குவா’ படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திலும் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மகள் மற்றும் மகனின் படிப்பிற்காக தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது தந்தையின் பெயரில் உள்ள சிவகுமார் அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். விழாவை முடித்துவிட்டு அவர் மீண்டும் மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது போது அவருடன் அவருடைய மகன் தேவ் உடன் இருந்தார்.
நடிகர் சூர்யா விமான நிலையம் வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் சூர்யாவின் மகனை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். தனது மகள் மற்றும் மகன் புகைப்படம் பத்திரிகையில் வருவதை விரும்பவில்லை என்பதை அவர் ஏற்கனவே பல பேட்டிகளில் தெரிவித்திருந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் ’தயவுசெய்து அவரை மட்டும் புகைப்படம் எடுக்க வேண்டாம்’ என்று நடிகர் சூர்யா அன்புடன் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பத்திரிகையாளர்களும் சூர்யாவை மட்டுமே புகைப்படம் எடுத்தனர்.
இதேபோல், படத்திலும் மிகவும் பிஸியாக இயங்கி வரும் நடிகர் சூர்யா சன் குழுமத்திற்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடிகர் சூர்யா பயணம் செய்தது தொடர்பாக அந்நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், தங்களது விமானத்தில் நடிகர் சூர்யா பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நடிப்பின் நாயகனுக்கு நன்றி. பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
https://twitter.com/flyspicejet/status/1681176423338328068?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









