நடிகர் சூரி பிறந்தநாள் – அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தலா 2.5 கிராம் தங்கம் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து சூரியின் சகோதரர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடினர். தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக நடித்து…

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்
பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து சூரியின் சகோதரர் மற்றும்
ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக நடித்து வந்த சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக நடிகராக உருவாகியுள்ளார். நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சூரியின் பெயரில் அவரது ரசிகர்கள் நற்பணி இயக்கம் தொடங்கி மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, ஏழை எளியோருக்கு அன்னதானம் என
பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர்

இந்நிலையில் நடிகர் சூரியின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும்
விதமாக இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிறந்த
அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 2.5 கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தையும்
வழங்கினர்.

நேற்று நள்ளிரவில் 12 மணியில் இருந்து இன்று வரை பிறக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட வுள்ளது, காலையிலிருந்து மாலை வரை 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சூரி நற்பணி மன்ற அகில இந்திய தலைவர் ஆதிசுவரன் மற்றும் நடிகர் சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் லக்ஷ்மணன் ஆகியோர் அணிவித்தனர்.

அப்போது மதுரை சேர்ந்த சுகன்யா என்று பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் சூரியின்  பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு மோதிரங்கள் குழந்தையின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.  நடிகர் சூரி அவரது சகோதரர் லக்ஷ்மணன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதால் அவர்களுடைய பிறந்த நாளின் போது அரசு
மருத்துவமனையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அணிவிக்கப்பட்டது சுவாரஸ்மாக அமைந்தது.

நடிகர் சூரி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்
இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் தங்க மோதிரங்கள்
அணிவித்து பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர் மன்றத்தினர் செயல் அனைவரிடமும்
பாராட்டை பெற்றது.

இதுகுறித்து பேசிய குழந்தைகளின் உறவினர்கள் நடிகர் சூரி இரட்டை சகோதரர்களாக
பிறந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு
மோதிரங்கள் அணிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எங்களது குழந்தை
பிறந்தவுடன் தங்க ஆபரணங்களை பெறுவது நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதனை வழங்கிய சூரியும் அவரது சகோதரரும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.