முக்கியச் செய்திகள் சினிமா

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்க நீண்ட நாள் ஆசை – நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் அடுத்து நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசினார்.

அவர் பேசியதாவது “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்தது எனது பாக்கியம். மணிரத்னம் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாகக் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சோழரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள இப்படம் உதவியாக இப்படம் இருக்கும்‌. தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். இப்படத்திற்குப் பிறகு தஞ்சை பெரிய கோயில் மிகப் பெரிய சுற்றுலா தளமாக மாறும். மக்களின் எதிர்பார்ப்பு இதில் இருக்கும். பொன்னியின் செல்வன் படத்தை நாகர்கோவிலில் பார்க்க உள்ளேன். தொடர்ந்து நிறையப் படங்களில் நடித்து வருகிறேன் ஹீரோ, வில்லன் எல்லாம் கிடையாது” எனப் பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் “ விஜய் சேதுபதி விக்ரமில் வில்லனாக நடித்துள்ளார். மக்களின் ரசனை மாறிவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல் நடிக்க வேண்டும். ரோஜா முதல் பான் இந்தியா படம்தான். வட இந்தியாவில் தென் இந்தியப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் சிறந்த படங்களை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

ஓடிடிகளில் நிறைய மொழி படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாடியே இப்படம் எடுத்திருந்தால் வந்தியத்தேவனாக நடித்திருப்பேன். மொத்தம் 150 நாள் படப்பிடிப்பில் 60 நாட்களுக்கு மேல் நான் நடித்துள்ளேன். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கும்போது எனக்குக் காயம் ஏற்பட்டது. வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுத்தேன். நாங்கள் பயன்படுத்திய அத்தனை நகைகளும் உண்மையான நகைகள் தான். எம்ஜிஆர் எடுக்க நினைத்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் பற்றித் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவே மற்ற ஊர்களில் அதிகளவில் புரொமோஷன் பண்ணப்படுகிறது.


வாரிசு படம் காட்சிகள் லீக்கானது பற்றி மக்கள்தான் உணர வேண்டும். சிறந்த படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தடை செய்யப்பட்ட ஒன்று பற்றி நான் நடிக்க மாட்டேன். தடை செய்யாதபோது என்னைக் கேள்விகேட்க வேண்டாம். ராடான் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க உள்ளேன். கௌதம்மேனன் படத்தில் எனது முழு உடலைக் காட்டி நடிக்க உள்ளேன். வைரமுத்து பாடல் எழுதாத காரணம் எனக்குத் தெரியாது. இப்போது சமூக வலைத்தளங்களில் தான் அரசியல் நடக்கிறது. அரசியலிலும் தொடர்ந்து செயல்படுவேன். பாஜகவிற்குச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விஜய்யுடன் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. அவரது நடிப்பை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பாடும் பாடல் பொன்னி நதி தான். கமலுடன் கருத்து வேறுபாடு கிடையாது. ராஜராஜன் சோழனின் நினைவிடம் இனிமேல் பராமரிப்பு செய்யப்படும். இங்குள்ள ராஜாக்களின் அரண்மனைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.சுபாஷ் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் நடிக்க நீண்ட நாள் ஆசை. சுபாஷ் சந்திரபோஸ் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது” என்றும் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு

Halley Karthik

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; முழு விவரம்

Halley Karthik

தமிழ்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan