லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் ’சூப்பர்ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தனது அசாதாரண நடிப்பால் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் முடிந்த பிறகு, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கும் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் உறுதி செய்துள்ளார். லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்த்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இதனை உறுதி செய்துள்ளனர்.







