அரசியல் கேள்விக்கு #NO சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

உதயநிதி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த…

Actor Rajinikanth said #NO to the political question!

உதயநிதி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கூலி படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை வந்தார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, “அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்” என்று ரஜினி பதிலளித்தார். மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.