30.2 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

“அயோத்தி” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ”அயோத்தி” திரைப்படம் நல்ல வரவெற்பை பெற்று வரும் நிலையில், நண்பர் சசிகுமாருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு கருத்துள்ள வெற்றிப் படம் அமைந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் பாலா , அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து, தற்போது நடிகராகவும் அறிமுகமாகி கலக்கி வருபவர் சசிகுமார். தொடக்க காலத்தில் இவர் நடித்த வெற்றிவேல், சுந்தரபாண்டியன், நாடோடிகள் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து விடா முயற்சியோடு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள அயோத்தி திரைப்படத்தில் நடித்துள்ள சசிகுமாருக்கு இப்படம் வெற்றிப்படமாக மட்டுமின்றி, நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் பாராட்டும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

மந்திரமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் எனபவர் இசையமைத்துள்ளார்.

மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அயோத்தி திரைப்படம், தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் அயோத்தி திரைப்படம் அளித்துள்ள வெற்றியால், சசிகுமாருக்கு அடுத்தடுத்து பகைவனுக்கு அருள்வாய், நாநா, பரமகுரு உள்ளிட்ட 4 பட வாய்ப்புகள் கிடைத்து மிகவும் பிசியாக கோலிவுட்டில் வலம் வருகிறார். இதுதவிர இயக்குநர் ஹரி இயக்கத்திலும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அயோத்தி படத்தினை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சசிகுமாரையும், படக்குழுவினரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அயோத்தி திரைப்படம், நண்பர் சசிகுமாருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading