நடிகர் நாகர்ஜுனா பிறந்தநாள்… சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த #KUBERA படக்குழு!

நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ‘குபேரா’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. ராஜ்கிரண், ராதிகா நடிப்பில் வெளியான பவர் பாண்டியை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…

நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ‘குபேரா’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ராஜ்கிரண், ராதிகா நடிப்பில் வெளியான பவர் பாண்டியை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ராயன்’ படத்தைத்  தொடர்ந்து தனுஷின் 51வதுப் படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘குபேரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா,  ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை மற்றும் பல இடங்களில் நடைப்பெற்ற வருகிறது. இந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.