திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’…

திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக தற்போது நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் “தசரா” திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயில் ஏழுமலையானை வழிபட்டனர். தரிசனத்திற்கு பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. என்னுடைய சகோதரி ரேவதி சுரேஷின் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.