ஃபர்ஹானா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி!!

“பர்ஹானா” திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் நல்ல அனுபவத்தை தந்ததாகவும், உரையாடல்கள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு…

“பர்ஹானா” திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் நல்ல அனுபவத்தை தந்ததாகவும், உரையாடல்கள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பர்ஹானா. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியிருந்தன,

இதனையடுத்து பர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது இல்லை என படக்குழு அறிக்கை வெளியிட்டது. படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருவதாகவும், நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டு மே 12 அன்று வெளியான பர்ஹானா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதனை வலுப்படுத்தும் விதமாக நடிகர் கார்த்திக் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நமது உறவுகளில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. ‘ஃபர்ஹானா’ திரைப்படம் முழு அனுபவத்தையும் தீவிரமாக படம்பிடித்துள்ளனர். இப்படம் நல்ல அனுபவத்தை தந்ததாகவும், உரையாடல்கள் மிகச்சிறப்பாக இருந்ததாகவும், படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த பதிவிற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.