இந்தியன் 2 திரைப்படம் சிறப்பாக வர நடிகர் கமல்ஹாசன் தான் காரணம் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் பாரா, நீலோற்பலம், காலண்டர், கதறல்ஸ், கம் பேக் இந்தியன், சகசக ஆகிய அனைத்து பாடல்களும் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. அண்மையில், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : #T20WorldCup: அரை இறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் – வெளியேறியது ஆஸ்திரேலியா!
இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் , சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் பேசியதாவது
“இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா இருந்தால் என்னென்ன செய்வார் என்பதை வைத்து தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன் முதல் பாகம் தமிழ்நாட்டை சார்ந்து மட்டும் இருந்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எல்லைகளை கடந்து உருவாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் நடிக்கும் போது 20 நாட்கள் prosthetics மேக்கப் போட்டு நடித்தார் கமல். ஆனால் தற்போது இந்த படத்துக்காக 70 நாட்கள் அந்த மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் சிறப்பாக வர காரணம் நடிகர் கமலஹாசன் தான். இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் விவேக்கை திரையில் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது”
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.









