நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!… அதிர்ச்சியில் திரையுலகினர்…

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி.  பொல்லாதவன்,…

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி.  பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று (மார்ச்.29) இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதனையடுத்து அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

48 வயதான டேனியல் பாலாஜியின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.