ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து, ரயில்வே துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த வாரம் கூட ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்றச் சம்பவங்கள் நடைபெற சாதகமான இடமாக ரயில் பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு அவகாசம் வழங்கினர்.
மேலும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து, ரயில்வே துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.




