#PorscheGT3 கார் வாங்கிய நடிகர் அஜித்! எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் அஜித்குமார் ₹4 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே ஜிடி3 ஆர்எஸ்ஸை (Porsche GT3 RS) வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர்…

actor ajith, new car, buy

நடிகர் அஜித்குமார் ₹4 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே ஜிடி3 ஆர்எஸ்ஸை (Porsche GT3 RS) வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘விடாமுயற்சி’ படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் :Formula4 கார் பந்தயம் | “விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

கார், பைக்குகள் போன்றவற்றில் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். சமீபத்தில், அவர் வெளிநாடுகளில் அதிக வேகத்தில் கார் ஓட்டுவது, பைக் டூர் செல்வது என தனது ஆர்வத்தை கட்டி வருகிறார். இது தொடர்பான வீடியோ பதிவுகளும் அண்மையில் சமூக வலைதளபக்கத்தில் வைரலானது.

சமீபத்தில் அஜித் பிறந்தநாளுக்கு அவரது மனைவி ஷாலினி டுகாட்டி வகை இருசக்கர வாகனத்தைப் பரிசளித்தார். கடந்த ஜூலை மாதம் தான் ரூ.9கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கினார். இந்நிலையில், போர்ஷே ஜிடி3 வகை கார் வாங்கியுள்ளார் நடிகர் அஜித். இந்தக் காரின் விலை சுமார் ரூ.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அஜித் குமார் மனைவி ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.