தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்…

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் :

 

1. லட்சுமிபதி ஐஏஎஸ் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

2. தங்கவேல்  ஐஏஎஸ் -கரூர் மாவட்ட ஆட்சியர்

3. பிரபுஷங்கர் ஐஏஎஸ் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

4. சுந்தரவள்ளி – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர்

5.  வீரராகவ ராவ் – தொழில்நுட்ப கல்வி ஆணையர்

6. செந்தில்ராஜ் – சிப்காட் மேலாண் இயக்குனர்

7. ஆல்பி ஜான் – சென்னைப் பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்

8. ஸ்ருதன் ராஜ் – விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்ட இயக்குனர்

9. ரத்தின சாமி – ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்ட இயக்குனர்.

 

ஐபிஎஸ் அதிகாரிகள் :

1.வன்னிய பெருமாள்- ஊர்க்காவல் படை டிஜிபி

2.தமிழ்ச்சந்திரன்- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி

3.செந்தில் குமாரி- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்

4.மகேஸ்வரி- நெல்லை மாநகர காவல் ஆணையர்

5ஜோஷி நிர்மல் குமார்- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி

6. திஷா மிட்டல்- காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி

7. அபிஷேக் தீக்ஷித்- சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர்

8.சாமுண்டீஸ்வரி – தமிழக காவல்துறை தலைமையக டிஐஜி,

9.சுரேஷ் குமார்- தென்காசி மாவட்ட காவல் எஸ்பி

10.சாம்சன்- மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்பி

11. ஜெயக்குமார் – திருவாரூர் மாவட்ட காவல் எஸ்பி

12. பிரபாகர்- கரூர் மாவட்ட காவல் எஸ்பி

13. சுந்தரவதனம் – கன்னியாகுமாரி மாவட்ட காவல் எஸ்பி

14. ஹரி கிரண் பிரசாத்- ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி

15. சுந்தரவடிவேல்- நீலகிரி மாவட்ட எஸ்பி

16. தீபா சத்யன்- தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு ஏஐஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.