மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பையும், சசிகலா விடுதலையையும் ஒன்று சேர்த்து பார்க்கத் தேவையில்லை என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, செல்லூர் கே.ராஜு உள்ளிட்டோர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே கையகப்படுத்தப்பட்டதாக கூறினார்.
வேதா நிலையத்தை மக்கள் பார்க்கும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.







