முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

முத்துகுமரனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை – அயலகத் தமிழர் நல ஆணையரகம் தகவல்

குவைத் நாட்டில் சுட்டுகொல்லப்பட்ட முத்துகுமரன் மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடல் கொண்டு வரப்படும் என அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி வேலைக்கு சென்றார். பாலைவனத்தில் தன்னை ஆடு, ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டதாகவும், மின் வசதி கூட இல்லாத இடத்தில் தங்கியுள்ளதாகவும் மனைவியிடம் தொலைபேசியில் கூறி அழுதுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு திரும்ப முயற்சி செய்த முத்துக்குமரன் செப்டம்பர் 7ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை குவைத் விசாரணை குழுவினர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

முத்துக்குமரன் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குவைத் நாட்டின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உடல் கொண்டுவரப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Web Editor

முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி; எதற்கு அனுமதியில்லை!

EZHILARASAN D

“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்

Jeba Arul Robinson