ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியில் 66 மாணவர்கள் தங்கி படிப்பதாக அறிக்கையளித்த வார்டன் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் -ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விடுதியில் மாணவர்கள் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளை கடிந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.







