ஜவான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக ஷாருக்கான் சென்னை வரவிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.
‘ஜவான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் முன்னிலையில் மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
ஜவான்’ படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் ஷாருக்கான் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வரவுள்ளார். இந்த விழாவில் ஷாருக் தவிர இயக்குனர் அட்லி, விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள். சென்னையில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நயன்தாரா கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.







