முக்கியச் செய்திகள் தமிழகம்

கைவிடப்பட்டது 9 அதிகாரிகள் மீதான அவமதிப்பு நடவடிக்கை

முன்னாள் தலைமை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனு மீதான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், பணிமூப்பை கணக்கிட்டு அதன் அடிப்படையில் 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு, டி.என்.பி.எஸ்.சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

அதேநேரம், 8 வாரத்தில் தனது தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை செய்யத்தவறிய தமிழக தலைமை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உள்ளிட்ட 9 அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழ்நாடு அரசின் நோக்கம் அல்ல என்றும், கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுது. இதையடுத்து, அதிகாரிகள் தரப்பில் மன்னிப்பு கோரியதால், வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

Gayathri Venkatesan

சிவாஜியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Saravana Kumar

சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு தற்கொலை செய்த மகள்!

Jayapriya