சிக்கன நடவடிக்கையால் ரூ.25 லட்சம் குறைந்த ஆவின் நிறுவன மின்கட்டணம்!

ஆவின் நிறுவனத்தில் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் மின்கட்டணம் குறைந்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டர் பதிவு ஒன்றை…

ஆவின் நிறுவனத்தில் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் மின்கட்டணம் குறைந்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் மேற்கோண்ட மின்சார சிக்கன நடவடிக்கையின் மூலம் ஒரு மாதத்தில் 2,40,500 யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.25 லட்சம் மின்கட்டணம் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பால்வளத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகமாகியுள்ளதாகவும், சென்னையில் தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.