ஆறு டாட் பந்துகள் வீசிய கிறிஸ் ஜோர்டன் – அபராதமாக 3000 மரக்கன்றுகள் நட உத்தரவு

லக்னோ-மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆறு டாட் பந்துகள் வீசிய வீரர் கிறிஸ் ஜோர்டன்  அபராதமாக 3000 மரக்கன்றுகள் நட உத்தரவு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக்…

லக்னோ-மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆறு டாட் பந்துகள் வீசிய வீரர் கிறிஸ் ஜோர்டன்  அபராதமாக 3000 மரக்கன்றுகள் நட உத்தரவு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிளே ஆப் சுற்று  தொடங்கியது. முதலாவது தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.  ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்று போட்டியில் பந்து வீச்சாளர்களால டாட் பால் போடப்பட்ட போதெல்லாம் ஒளித் திரையில் டாட் பால் லோகோவுக்கு பதிலாக  மரம் காண்பிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தப் போட்டியில் பவுலர்கள் வீசிய ஒவ்வொரு டாட் பாலுக்கும் டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக மரக்கன்று அடையாளம் காட்டப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று நேற்று தகவல்கள் வெளியாகின.

அதன்படி பந்து வீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு டாட்பாலுக்கும் 500 மரங்கள் நடுவதற்கு டாடா மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பசுமை முயற்சியாக பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் இந்தியா முழுவதும் 500 மரங்களை நடும் பெரிய முயற்சியை பிசிசிஐ எடுத்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனை டாடா நிறுவனம் வழங்கி வரும் நிலையில் டாடா மற்றும் பிசிசிஐ ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்த மரங்களை நட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை-குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில்  34 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் 17 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வெளியாகின.

இந்த நிலையில் நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கிறிஸ் ஜோர்டன் போட்ட 16வது ஓவரில் 6 பந்துகளும் டாட் பந்துகளானதால், பிசிசிஐ-யின் பசுமை விழிப்புணர்வின் படி தலா 500 மரக்கன்றுகள் என மொத்தமாக 3,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.