மானாமதுரை அருகே ஒரு இரு சக்கர வாகனத்தில் 4 பள்ளி மாணவர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் சென்ற காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் மாணவர்கள் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
—அனகா காளமேகன்







