விமானத்தில் பெண் ஒருவர் மருதாணி வைத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நீண்டநேர விமான பயணம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு போர் அடிக்க தொடங்கும். என்ன தான் திரைப்படம் பார்த்தாலும், புத்தகம் படித்தாலும் பாடல்களை கேட்டாலும் நேரம் போகாது. ரயிலில் பயணம் செய்வது போல் அங்கும் இங்கும் நடந்து செல்லவும் முடியாது. ஒரு கட்டத்தில் சோர்வாக நீங்கள் உணரலாம். வேறு என்ன தான் செய்ய முடியும். அப்போது மருதாணி வைத்துக்கொண்ட வீடியோவை பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் 6 மணிநேரமாக விமானத்தில் பயணம் செய்வதை காட்டுகிறது. இந்த பதிவுக்கு ஆதரவு மறறும் எதிர் கருத்துகளை பலர் பகிர்ந்து வருகின்றனர். அப்பாடா விமானத்தில் நேரத்தை கழிக்க சரியான பொழுதுபோக்கு என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மருதாணி வைத்துக்கொள்ள வேறு இடமே கிடைக்கவில்லையா என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.





