சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே சாலையில் இருந்த நாயை பிடித்து உண்பதற்காக மொட்டை மாடியில் காத்திருந்த சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலின் அருகே உள்ளது பம்பா. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக
காவல் துறையினர் தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வகையில்
காவல் துறையினருக்கு மூன்று மாடிகள் கொண்ட விடுதி பம்பை பகுதியில் உள்ளது.
இந்த விடுதியில் காவலர்கள் தங்கி இருந்த நிலையில், விடுதியில் அருகே உள்ள தெருவில் நாய் ஒன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்த காவலர்கள்
விடுதிக்கு வெளியே உள்ள கட்டிடத்தில் நின்று பார்க்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெகு நேரமாக
சிறுத்தை ஒன்று தெருவில் குறைத்துக் கொண்டிருக்கும் நாயை வேட்டையாடுவதற்காக காத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த காட்சியை மிகுந்த அச்சத்துடன் காவலர்கள் தங்கள் அலைபேசியில் பதிவு
செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-ம.பவித்ரா








