மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் சீன் – கின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸ்!

மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் சீன் செய்து ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் ரியல் ஸ்டண்ட் செய்யும் நடிகர்கர்களுள் டாம் க்ரூஸுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிளின் அடுத்தடுத்த பாகங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. இந்த படங்களில் அவரது ஸ்டண்ட் காட்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவில் அமைந்திருக்கும்.

மிஷன் இம்பாசிபிளின் 8வது பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக டாம் க்ரூஸ் நோர்வே பள்ளத்தாக்கின் உயரமான பகுதியில் இருந்து பைக் ஸ்டண்ட் செய்திருப்பார். இது போன்று மிஷன் இம்பாசிபிளின் ஒவ்வொரு பாகத்திலும் குறிப்பிடத்தக்க  ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து பிரம்மிப்பில் ஆழ்த்துவார்.

இந்த நிலையில் மிஷன் இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக்காட்சிக்காக டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 16 முறை எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.