குற்றாலத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம்…

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக…

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெயின் அருவி கரையோரம் அமைந்துள்ள 40-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடிக்கு மேல் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விரைவாக கடைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருவி அருகே உள்ள உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்காலம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.