அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு; நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் -ஓ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”அ.தி.மு.க. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இயக்கத்தின் தொண்டர்களின் கருத்தை அறிந்து எங்களின் முடிவை அறிவிப்போம். அதேபோல், பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

கொடநாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி தமிழக மக்களுக்குத் தெரியும். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முடிவு தமிழக மக்களின் எண்ணப்படி வரும்.” என்றவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.