உடலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளும் வினோத வழிபாடு

கிருஷ்ணகிரியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியை நடத்தி துக்கம் அனுசரித்தனர்.  முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை, எஷீர் என்பவர் கூண்டுக்குள் அடைத்து…

கிருஷ்ணகிரியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியை நடத்தி துக்கம் அனுசரித்தனர். 

முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை, எஷீர் என்பவர்
கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொலை செய்தார் என கூறப்படுகிறது.
அந்த நாளை ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

அதனால் மொகரம் பண்டிகையின்போது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்மை கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாகச் சென்று தங்களது துக்கத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கள் உடம்மை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் உடம்பில் கீறிய படியும், அடித்துக் கொண்டும் ரத்தம் சொட்ட, சொட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று துக்கத்தை வெளிபடுத்தினர்.

இதில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்று தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.