மேஜை டிராயரில் படுத்து உறங்கிய பாம்பு; அதிர்ச்சி தரும் வீடியோ!

வணிக வளாகத்தில் மேஜை டிராயரில் பாம்பு ஒன்று படுத்து உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  நீங்கள் உங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்படும்போது, ​​​​உங்கள் மேசை டிராயரைத் திறந்து அதில் ஒரு…

வணிக வளாகத்தில் மேஜை டிராயரில் பாம்பு ஒன்று படுத்து உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நீங்கள் உங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்படும்போது, ​​​​உங்கள் மேசை டிராயரைத் திறந்து அதில் ஒரு பாம்பு தூங்குவதைக் கண்டால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும். கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தைப் பற்றிய வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாக பரவைவருகிறது. மேலும் அந்த வீடியோவில், ” ஒரு உள்ளூர் வணிக வளாகத்தின் மேலாளர் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தார், பணிநேரம் முடிந்தவுடன், அவர் தனது டிராவைத் திறக்க நேர்ந்தது மற்றும் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர் அதிர்ந்து போனார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் பாம்பை வல்லுநர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து பலரிடம் இருந்து பல கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.