உதகையில் ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

உதகையில் ஆன்லைனில் செல்போனை வாங்கிய நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக கல் இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நீலகிரி…

உதகையில் ஆன்லைனில் செல்போனை வாங்கிய நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக கல் இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மோதிலால் லட்சுமண். இவர் தனது
மனைவிக்காக ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் வாங்கியுள்ளார்.

அவ்வாறு ஆன்லைனில் தனது மனைவிக்காக வாங்கிய செல்போன் பார்சல் நேற்று
வீட்டுக்கு வந்துள்ளது. அந்த பார்சலை வாங்கி பிரித்துப் பார்த்த மோதிலால்
லட்சுமணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

செல்போனுக்கு பதிலாக, கல்லொன்று வைக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோதிலால் அருகாமையில் உள்ள காவல் துறையில்
புகார் அளித்துள்ளார்.


ஆன்லைனில் செல்போனுக்கு பதிலாக கல் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.