செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஒத்திகையா?

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஒர் ஒத்திகையாக கர்ட்டைன் ரைசர் ரேபிட்” சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி…

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஒர் ஒத்திகையாக கர்ட்டைன் ரைசர் ரேபிட்” சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது.  இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சாதாரண மக்களும் பங்கேற்கும் வகையில் “கர்ட்டைன் ரைசர் ரேபிட்” சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.

நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்பாக COURTAIN RAICER FIDE RAPID CHESS போட்டி நடத்தப்பட உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அதே அரங்கில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஓபன் கேட்டகரி முறையில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5,00,000 பரிசு தொகையாக வழங்க பட இருக்கிறது.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஒர் ஒத்திகையாக இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் ஏற்கனவே முன் பதிவு செய்யபட்டு, போட்டியானது நடத்தப்பட உள்ளது.

வெளிநாட்டவர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. 1400க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள இந்த போட்டி, உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் இணையதள பக்கத்தில் நேரலையாக பகிரப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.