நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்? – இந்த ஆண்டு 10 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்

கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய…

கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும், பின்னர் கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டின் பிற்பாதியில் மிசோரம், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

அத்துடன், காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பத்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.