மும்பபை சாலையோர காஃபி கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சமூக வலைதளத்தில் பிரசாந்த் நாயர் என்பவர் காபி கடை முன் வைக்கப்பட்டுளள ஒரு போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது காஃபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என எழுதப்பட்டுள்ளது.
அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது :
மும்பை கண்டிவல்லியை அடுத்த தாக்கூர் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது சாலை ஓரத்தில் ஒரு சிறிய காஃபி கடை தென்பட்டது. அங்கு காஃபி, பிஸ்கெட், சினாக்ஸ் விற்பனை செய்தவற்காக வைக்கப்பட்டிருந்து. அந்த கடையின் முன் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உற்றுப்பார்த்தேன். அதில் ஒரு அழகான வாசகம் தென்பட்டது. எனது காஃபி கடையை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என எழுதப்பட்டிருந்ததை கண்டு மெய்சிலிர்த்தேன்.
இணையவாசிகளே, மயங்க் பாண்டே என்ற இளைஞரின் கனவைப் போற்றுங்கள், அவர் ஒருநாள் அதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இளைஞர்கள் இதுபோன்ற கனவை காணும் போது நாட்டின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







