இன்று வெளியாகிறது பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்…

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் இளநிலை…

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

இணையதளம் வாயிலாக தரவரிசை பட்டியலை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தரவரிசை தொடர்பான புகார்களை ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 2-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.