மேகமலை பகுதியில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காலநிலை மாற்றம் மற்றும்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.  இந்த புதிய வகை வண்ணத்துப்புச்சி இனத்திற்கு  “சிகரிடிஸ் மேகமலையென்சிஸ்”  (Cigaritis meghamalaiensis) என்று மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.

https://twitter.com/supriyasahuias/status/1746106694319456629?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1746106694319456629%7Ctwgr%5E7c93d86e15f1648e24a473689646287419076094%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fias-officer-shares-pic-of-newly-discovered-blue-coloured-butterfly-species-in-western-ghats-101705254572781.html

தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர். காலேஷ் சதாசிவம்,  எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடிதுள்ளனர்.  இது “என்டோமான்”என்னும் அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337 ஆக உயர்ந்துள்ளது.  இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும்.

முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி,  துணை இயக்குநர் ஆனந்த்,  கள இயக்குநர் பத்மாவதே ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றும்  சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.