வெளியானது ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் புதிய பாடல்

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ’நானே வருவேன் ’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும்…

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ’நானே வருவேன் ’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் யுவனின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாடலான ’ரெண்டு ராஜா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து பாடிய இந்த பாடல் இப்போது டிரண்ட் ஆகி வருகிறது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.