வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (24-07-2025) காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
24-07-2025 மற்றும் 25-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்கள் மற்றும்  கோயம்புத்தூர் & திருநெல்வேலி  மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.
26-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.
27-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.
28-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
29-07-2025 மற்றும் 30-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 
இன்று (24-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது  / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
நாளை (25-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:   
தமிழக கடலோரப்பகுதிகள்: 
24-07-2025 முதல் 28-07-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
24-07-2025 மற்றும் 25-07-2025: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-07-2025: மத்திய, அதனை ஒட்டிய தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-07-2025 மற்றும் 28-07-2025: மத்திய, அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
24-07-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தெற்கு கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில  பகுதிகளில் சூறாவளிக்காற்று   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள்,  தென்கிழக்கு மற்றும் அதனை  ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு கொங்கன்-கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள்  மற்றும்  லட்சத்தீவு–மாலத்தீவு  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-07-2025 மற்றும் 26-07-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில  பகுதிகளில் சூறாவளிக்காற்று   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள்,  தென்கிழக்கு மற்றும் அதனை  ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடகிழக்கு, அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள்  மற்றும்  லட்சத்தீவு–மாலத்தீவு  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-07-2025 மற்றும் 28-07-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்-கோவா- கர்நாடகா கடலோரப்பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு  பகுதிகளில் சூறாவளிக்காற்று   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள்,
தென்கிழக்கு மற்றும் அதனை  ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடகிழக்கு, அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள்  மற்றும்  லட்சத்தீவு–மாலத்தீவு  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.