வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மேற்கு வங்கம் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுது குறைந்த காற்றழுத்த தாழ் பகுதியாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மேற்கு பகுதியில் வடக்கு பஞ்சாப்பை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வடகிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகள் வடமேற்கு இந்தியா, இந்தியாவின் மத்திய பகுதிகள் மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழையும் சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்னிந்தியாவை பொருத்தவரையில் கேரள பகுதிகள், தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளததாகவும், தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







