அரிசி சாப்பிடாததால் அரிக் கொம்பன் யானை உடல் மெலிந்து உள்ளது என புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில் உள்ள நிலையில், யானைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் செண்பக பிரியா நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில், அரிக் கொம்பன் யானை தற்போது நன்றாக தான் உள்ளது. அரிசி சாப்பிடாத்தால் உடல் மெலிந்து உள்ளது. முத்துக்குளி வயல் பகுதியில் வனத்துறையினர் சுமார் 40 பேர் கண்காணித்து வருகின்றன. எடை மட்டும்தான் குறைந்துள்ளது. அதன் கட்டமைப்பு அப்படித்தான் இருக்கும். யானைக் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் குணமடைந்து விட்டது என புலிகள் காப்பகம் துணை இயக்குனர் செண்பக பிரியா நியூஸ்7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.







