வாட்ஸ் ஆப்பில் அடுத்து வரவுள்ள புது அப்டேட் என்ன தெரியுமா?

பயனர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக  புதிய அப்டேட் இன்று கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின்…

பயனர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக  புதிய அப்டேட் இன்று கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல அந்நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் மெட்டா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பயனர்களின் குறிப்பிட்ட அரட்டைகளை ( சாட்டிங்ஸ்) லாக் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ் அப்பின் பீட்டா வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

ஒரு பயனர் தனது வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முதன்மை சாதனங்களில் மட்டுமல்லாமல், அது டெஸ்க்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இணைக்கப்பட்டிருந்தாலும், அதிலும் சில அரட்டைகளை லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டு வர பணியாற்றி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

தற்போது முதன்மை சாதனங்களில் மட்டுமே சில அரட்டைகளை லாக் செய்யும் வசதி உள்ளது. இனி, வாட்ஸ்ஆப் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களிலும் அரட்டைகளை லாக் செய்யும் வசதி வருவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.