குணா குகையில் சுற்றுலா பயணியிடம் இருந்து பறிபோன 500 ரூபாய் நோட்டு கட்டு – பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குரங்கு!

கொடைக்கானல் குணா குகை சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணியின் கை பையில் இருந்த 500 ரூபாய் கட்டு நோட்டை பறக்கவிட்ட குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தளமாகும் இங்கு
பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து ஆண்டுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அங்கு முக்கிய சுற்றுலா தளங்களாக விளங்கும் தூண்பாறை,குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான  ‘மஞ்சு மேல் பாய்ஸ்’ என்ற மலையாள சினிமா குணா குகையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் குணா குகை பகுதியை காண வந்த சுற்றுலா பயணி ஒருவரின் கை பையை குரங்கு தூக்கி கொண்டு போய் மரத்தின் உச்சியில் உட்காந்து அந்த பைக்குள் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என தேடிய போது 500 ரூபாய் கட்டு இருந்தது. அதை எடுத்து ஒவ்வொரு தாளாக காற்றில் பறக்கவிட்டது. சுற்றுலா பயணிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் 500 ரூபாய்களை பறக்கவிட்ட பின் அந்த கை பையை கீழே தூக்கி போட்டது.

இதனால் அங்கு 500 ரூபாய் தாளால் பணமழை கொட்டியது. மேலும் சுற்றுலா பயணிகள் கூறும் பொழுது வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செய்துவதாகவும் குணா குகை பகுதியில் அதிக அளவில் குரங்குகள் தொல்லை கொடுப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் வனத்துறை பகுதியில் கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்து வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.